இரவு காவலர் பணிக்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருவள்ளுர், டிச.28: திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு இரவு காவலர் பணிக்கு தினக்கூலி அடிப்படையில் அருந்ததியர் - ஆதிதிராவிடர் ஆண் ஒரு நபர் நியமனம் செய்யப்படவுள்ளார். குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் எழுத்துப்பூர்வமான சுயவிவர விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்று, சாதி சான்று நகலுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 6/25, லால் பகதூர் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், திருவள்ளுர் - 602 001, தொலைபேசி - 044 - 29595311 என்ற முகவரிக்கு வரும் 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: