×

டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தின்போது பாதுகாப்பு தேவை எஸ்பியிடம் மனு

காஞ்சிபுரம், டிச.28: வரும் டிசம்பர் 30ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் டாஸ்மாக் மதுபானக் கூடம் டெண்டர் ஏலத்தின் போது பாதுகாப்பு வழங்க வேண்டும் என எஸ்பி சுதாகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடுடாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் அன்பரசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராமநாதன் ஆகியோர் கலெக்டர் ஆர்த்தி, எஸ்பி சுதாகர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மதுபான கூட்டங்கள் நடத்தும் உரிமத்துக்கான டெண்டர் ஏலம், வரும் டிசம்பர் 30ம் தேதி மாவட்ட மேலாளர்கள் தலைமையில் நடக்க உள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை சிட்கோ வளாகத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்க்கான டாஸ்மாக் மதுபான கூடங்கள் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் ஏலம் நடைபெறுகிறது. டெண்டர் ஏலத்தில் கலந்து கொள்ள மதுபான கூடங்கள் அமைந்துள்ள கட்டிடங்களின்  உரிமையாளர்களின் தடையில்லா சான்று அவசியம் வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அரசியல் பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி டெண்டர் ஏலத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கிறார்கள். அதனால் டெண்டர் ஏலம் நடக்கும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு