தூத்துக்குடியில் நாளை தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் இல்ல விழா

தூத்துக்குடி, டிச. 28: தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் மெம்பர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு மகள் நிஸியா பூப்புனித நீராட்டுவிழா தூத்துக்குடியில் நாளை (29ம்தேதி) மாலை நடக்கிறது.  தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல வக்கீலும், தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் மெம்பருமான மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு உஷா ஜேனட் மேரிபிரபு ஆகியோரது மகள் நிஸியாவின் பூப்புனித நீராட்டு விழா நாளை (29ம்தேதி) நடக்கிறது. தூத்துக்குடி  2ம்கேட் அருகேயுள்ள அபிராமி மஹாலில் நாளை மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நீதிபதிகள், அமைச்சர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் மெம்பர்கள், அரசு வக்கீல்கள், அரசியல் கட்சி  பிரமுகர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்துகின்றனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் மெம்பருமான மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, உஷா ஜேனட் மேரி, ஸ்டீவ் ஆண்டனி தாமஸ் மற்றும் தூத்துக்குடி லாரல் ஷீலா ராணி, ஞானராஜ் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Related Stories: