அண்ணாமலை பல்கலை புதிய பதிவாளராக சீத்தாராமன் பொறுப்பேற்பு

சிதம்பரம், டிச. 28:  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக டாக்டர் சீத்தாராமன் (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக நேற்று மாலை பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். சீத்தாராமன் இதற்கு முன்பு பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத்தலைவராக பணியாற்றினார். பதிவாளராக பொறுப்பேற்ற சீத்தாராமன் துணைவேந்தர் டாக்டர் ராம. கதிரேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பல்கலைக்கழக தேர்வுக்கட்டுபட்டு அதிகாரி செல்வநாராயணன், தொலைதூரக் கல்வி இயக்குனர் சிங்காரவேலன் மற்றும் பல்கலைகழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள்,

அனைத்து பிரிவு இயக்குனர்கள், அதிகாரிகள், நிதி அலுவர்கள் மற்றும் ஆசிரியல்லாத ஊழியர்கள், ஊழியர் சங்கங்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: