குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

முஷ்ணம், டிச. 28: முஷ்ணம் அருகே மாமங்கலம் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் மகன் விஜய் (21), பட்டதாரி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிளுவன்காட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பாக சமூகநலத்துறைக்கு வந்த தகவலின்பேரில் சோழத்தரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீனா, சோழத்தரம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் காவல்துறையினர் இளம்வயது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் விஜய் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து மனு அளிக்கின்றனர்.

Related Stories: