×

ஐயப்பன் எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

கடலூர், டிச. 28: கடலூர் வடக்கு ஒன்றியத்தில் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.எல் குணசேகரன் முன்னிலையில் கடலூர் வடக்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி அமமுக கிளை செயலாளர் சங்கர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் பூபாலன், மோகன், முரளி, ஜானகிராமன், முத்துவேல், கேசவன் மற்றும் பலர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் தூக்கணாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்  ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனஞ்ஜெயன், குணசேகரன், மாவட்ட பிரதிநிதி வீரராகவன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், இளைஞரணி மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் நந்தன், மூர்த்தி, குமார், அழகானந்தம், சிந்துநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Iyappan ,MLA ,
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...