கடலூருக்கு மாற்று புறவழி பேருந்து நிலையம்

கடலூர், டிச. 28: கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி, கடலூரில் துவக்கப்பட வேண்டும். கெடிலம் தென்பெண்ணையாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த ஆறுகளின் நீர்கடத்தும் திறனை அதிகப்படுத்த வேண்டும். கெடிலம் பெண்ணையாற்றில் 2 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டு கரைகளில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.  மாற்று புறவழிச்சாலை பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும். கடலூருக்கு மாற்று புறவழி பேருந்து நிலையம் மற்றும் ஆமினி பஸ், அரசு விரைவு பேருந்துக்கு தனி பேருந்து நிலையமும், நகர பேருந்து தனி பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories: