×

இருக்கன்குடி கோயில் முடியிறக்கும் பணியாளர்கள் ஊக்கத்தொகை வழங்க கோரி மனு

விருதுநகர், டிச. 28: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோயில் முடியிறக்கும் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து மனு அளித்தனர். அதில், ‘கோயில் வளாகத்தில் 100 பேர் முடியிறக்கும் பணியை செய்து வருகிறோம். தமிழக அரசு அறிவித்துள்ள ஆணைப்படி ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம், நாவிதர்களுக்கான பணித்தொகை சீட்டிற்கு ரூ.30 வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

Tags : Irukkankudi ,
× RELATED திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி...