நிலுவையுடன் அகவிலைப்படி உயர்வு வழங்ககோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 28: டிஎன்எஸ்டிசி ஓய்வூதியர் மற்றும் பென்சனர் நலச்சங்க பேரவை சார்பில் திருச்சி அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதிய நிதி காப்பகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 6 ஆண்டாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: