×

திருச்சியில் ஸ்ட்ராமிங் ஆபரேசன் வாகன சோதனையில் 2,700 வழக்கு பதிவு

திருச்சி, டிச. 28: திருச்சி மாநகரில் நேற்றுமுன்தினம் காலை 6 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையிலான 24 மணிநேர ‘ஸ்ட்ராமிங் ஆபரேசன்’ நடத்தியதில் 2,700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருச்சிக்கு முதல்வர் வருகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிமுதல் நேற்று அதிகாலை 6 மணிவரை ஸ்ட்ராமிங் ஆபரேஷன் நடத்த மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகரில் உள்ள 7 காவல் சோதனை சாவடிகள் மற்றும் மாநகரில் உள்ள 14 சட்டம், ஒழுங்கு காவல் நிலைய போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மற்றும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் எவ்வித ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல், முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 2,600 பேர் மீது வழக்கு பதிந்தனர். அனுமதியின்றி மது விற்ற 32 பேர் மீது வழக்கு, கஞ்சா விற்ற 5 பேர் கைது, குட்கா விற்பனை செய்ததாக 26 வழக்குகள், நடத்தை விதிமீறியதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் லாட்ஜ், ஓட்டல்கள், விடுதிகளில் நடத்திய சோதனையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிய 64 பேரிடம் முறையாக ஆவணங்கள் உள்ளதா எனவும் சரிபார்க்கப்பட்டது. இதுபோன்ற திடீர் ஸ்ட்ராமிங் ஆபரேசன் அடிக்கடி நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீதான நடவடிக்கை தொடரும் எனவும் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags : Trichy Storm Operation ,
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு