கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சுதர்சன ஹோமம்

திருச்சி, டிச. 28: உலக நன்மைக்காக கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மகா சுதர்சன ஹோமம் நடைபெற உள்ளது. திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. 16 கரங்களுடன் சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை பிரார்த்திக் கொண்டால் சிறந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும் மகா சுதர்சனரின் ஜன்ம நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தன்று மகா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: