×

திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் பொங்கலுக்குள் விரைவு ரயில் சேவை துவக்க வேண்டும்

திருவாரூர், டிச.28: திருவாரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நலக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்திய ரயில்வேயில் பயணிகளின் சேவைகளை மேம்படுத்துவதற்காக ‘பயணிகள் நலக் குழு (பாசஞ்சர் அமெனிடி கமிட்டி) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொள்ளும். இதனையொட்டி உறுப்பினர் பி.கே கிருஷ்ணதாஸ் தலைமையில் மஞ்சுநாதா, ரவிச்சந்திரன், கோட்ல உமாராணி, அபிட்தாஸ் ஆகியோரை கொண்ட குழுவினர் திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

குழுவினரை திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க தலைவர் தணிகாசலம், செயலர் முனைவர் பாஸ்கரன் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் வணிகர் சங்க பேரமைப்பு உட்பட பலரும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் மாதிரி ரயில் நிலையம் என அறிவிக்கப்பட்டும் எந்த வசதிகளும் செய்யப்படாமல் உள்ள திருவாரூர் ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில் நிலையமாக மாற்ற உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் வரும் பொங்கலுக்குள் விரைவு ரயில் சேவைகள் துவக்கப்பட வேண்டும். ரயில் நிலைய முகப்பில் பெயர் பலகை அமைத்திட்டு மறுபடியும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடி:
டாக்டர் மஞ்சுநாதா, ரவிச்சந்திரன், கோட்லா உமா ராணி, அபிஜித் தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய ரயில்வே வாரிய பயணிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் மன்னார்குடி ரயில் நிலையத்தில் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆய்வுக் குழுவினரை நேரில் சந்தித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரசு ஒப்பந்தக் காரர் அசோகன் என்பவர் கொடுத்த மனுவில், மன்னார்குடி ரயில் நிலையத்தில் அமைந்துள்ள சரக்கு முனையத்தில் இரண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.என்றார்.

மன்னை வர்த்தக சங்க சார்பில் அதன் பொதுச்செயலாளர் அசோகன், பொரு ளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், மன்னார்குடி, பட்டுக்கோட்டை இடையிலான புதிய ரயில் போக்கு வரத்து திட்ட நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்றனர். பாஜக சார்பில் அதன் மாவட்ட தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் செல் வம், பாலபாஸ்கர் ஆகியோர் அளித்த மனுவில், மன்னார்குடி ரயில் நிலைய த்தில் பயணிகள் தங்கு வதற்கு ஓய்வறை ஒன்றை அமை த்து தர வேண்டும். மன்னார்குடி பெங்களூரு இடையே பயணிகள் ரயில் ஒன்றை இயக்க வேண் டும் என்றனர். இதையடுத்து மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே வாரிய பயணிகள் மேம்பாட்டு குழுவினர் உறுதியளித்தனர். ஆய்வின் போது நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் உடனிருந்தார்.

Tags : Thiruvarur ,Pattukottai ,Karaikudi ,Pongal ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...