×

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நந்தவனத்தில் மரக்கன்று, காய்கறி செடிகள் அமைக்கும் பணி

திருவாரூர், டிச. 28: திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் மற்றும் காய்கறி செடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலின் நந்தவனம் பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பூச்செடிகள் மற்றும் அழகு செடிகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தோட்டக்கலை துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நந்தவனம் பராமரிப்பு பணியில் கொய்யா, எலுமிச்சை, மா, மாதுளை, கருவேப்பிலை உட்பட பல்வேறு செடிகள் மற்றும் பூச்செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி கோயிலின் அன்னதான திட்டத்திற்கு உதவிடும் வகையில் அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகள் மற்றும் மிளகாய், கத்தரி போன்ற செடிகளை பயிரிடவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Thiyagarajaswamy Temple Nandavanam ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...