நெல் விற்பனையை ஆன்லைன் பதிவு ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,டிச.28: தமிழக அரசின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என்பதை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் பழனி அய்யா, கோவிந்தராஜ், முனியாண்டி, விவசாயிகள் சங்க அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பையன், தஞ்சாவூர் ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‘விவசாயிகள் நெல் விற்பனையை தடுக்கும் வகையிலும், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: