×

கறம்பக்குடி அருகே பட்டா சிறப்பு திருத்த முகாம்

கறம்பக்குடி, டிச.28: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பட்டத்திக்காடு ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் பட்டா சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை கலெக்டர் மனோகரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இந்த திருத்த முகாமில் பொது மக்கள் 10 பேரிடம் இருந்து மனுக்களை வருவாய் துறையினர் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் பட்டத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வருவாய் துறை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Patta ,Karambakudy ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி