கலெக்டரிடம் விசிக மனு

தேனி, டிச. 28: உத்தமபாளையத்தில் உள்ள 3 அடி அம்பேத்கர் சிலையை 6 அடி உயர சிலையாக மாற்றி வைக்க அனுமதி வழங்கக் கோரி, கலெக்டரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி தலைமையில், அக்கட்சியினர் நேற்று தேனியில் கலெக்டர் முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது : உத்தமபாளையம் கிராம சாவடி அருகே 3 அடி உயரத்தில் அம்பேத்கார் சிலை உள்ளது. இதனை 6 அடி உயரமுள்ள வெண்கலச்சிலையாக மாற்றி வைப்பதற்கு பலமுறை மனு அளித்தும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, 3 அடி உயர சிலையை மாற்றி, 6 அடி உயர வெண்கல அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

Related Stories: