கம்பம்மெட்டு வனப்பகுதியில் இருமாநில போலீசார் சோதனை

கம்பம், டிச. 28: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தமிழக-கேரள எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய பகுதிகள் வழியாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக, கேரள போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இடுக்கி-தேனி மாவட்ட தமிழக கேரள எல்லையோரப்பகுதியான கம்பம்மெட்டு, மந்திப்பாறை, மூங்கிப்பள்ளம் ஆகிய வனப்பகுதியில் சோதனை நடைபெற்றது.

இதையடுத்து, கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையும், எல்லை வனப்பகுதிகளில் சிறப்புச் சோதனையும் நடத்தப்பட்டது. இதில், கேரள எக்சைஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் மனூப், சுரேஷ், அசோகன், கம்பம் மேற்கு வனத்துறை ராஜசேகரன், லியாகத் அலிகான், தமிழ்நாடு காவல்துறை சார்பில் ருத்ரமூர்த்தி, மகாதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். சோதனை புத்தாண்டு வரை தொடரும் என தெரிவித்தனர்.

Related Stories: