வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி துவங்க கோரி மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,டிச.28: செந்துறை அடுத்த சிலுப்பனூர் கிராமத்திலுள்ள வெள்ளாற்றில் நிறுத்தப்பட்ட மணல் குவாரியை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அசாவீரன்குடிக்காடு வட்டார மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கலெக்டரிடம் அளித்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மணல் குவாரியை நம்பி வாழ்ந்து வரும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பங்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு கூட தீவனம் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, உடனடியாக மீண்டும் மணல் குவாரியை தொடங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: