×

நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள் வேலையை செல்போனில் படம் பிடிப்பதை எதிர்த்து மறியல்

கீழ்வேளூர், டிச.28: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே துவங்கிட கோரியும், 100 நாள் வேலையை செல்போனில் பதிவு செய்வதை நிறுத்தக் கோரியும், பேரூராட்சியில் விரைவாக கணக்கெடுப்பை முடித்து நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உடனே தொடங்கிட வேண்டும், ரேஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் கடைத்தெருவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ரேசன் அரிசியை சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.
ஒன்றியச் செயலாளர் சுபாதேவி, ஒன்றியத் தலைவர் வளர்மதி, ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈடுப்பட்டவர்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், ராஜகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை கைவிட்டனர். அப்போது சாலை மறியல் போராட்டம் செய்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை சேர்ந்த 185 பெண்கள் உட்பட 195 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர்.  மறியல் போராட்டத்தால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Nagai Uzhavarsanta Kizhvelur ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...