×

மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ரேஷன் கடை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

மயிலாடுதுறை, டிச.28: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துர்நாற்றம் வீசும் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரேஷன் கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இயற்கை விவசாயி ராமலிங்கம் முன்னிலையில் அக்கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் மக்கள் சமைத்து சாப்பிட முடியாத அரிசியைத் தொடர்ந்து வழங்குவதை தடுத்து நிறுத்தி தரமான அரிசி வழங்க வேண்டும், ரேஷனில் எடை குறையாமல் பொருட்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய மக்கள் அரசின் சலுகைகளை பெற முடியாமல் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் தவறாக வழங்கிய என்பிஎச்எச் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக பிஎச்எச் குடும்ப அட்டையாக மாற்றி வழங்க வேண்டும் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் மயிலாடுதுறையில் 4 இடங்களிலும், பெரம்பூரில் 7 இடங்களிலும், குத்தாலத்தில் 5 இடங்களிலும், மணல்மேட்டில் 3 இடங்களிலும், பாலையூரில் 4 இடங்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Mayiladuthurai district ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...