சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் 98வது பிறந்தநாள் விழா

தேவகோட்டை, டிச.28: தேவகோட்டை  சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் 98வது பிறந்தநாள் மற்றும் கல்லூரியின் பொன்விழா நேற்று நடைபெற்றது. தேவகோட்டை ஜமீன்தார் சோம.நாராயணன் செட்டியார் தலைமை ஏற்றார். கல்லூரி செயலர் சாந்தி ஆச்சி, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்  ஜெயம் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். செட்டிநாடு குழும மேலாண் இயக்குனர் முத்தையா என்ற ஐயப்பன்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். குன்றக்குடி  தவத்திரு பொன்னம்பல அடிகளார்  பொன்விழா மலரை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.

   

விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பாக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், ஆசிரியர் சார்பாக ராதாகிருஷ்ணன், அலுவலர் சார்பாக அலுவலக கண்காணிப்பாளர் சந்திரன், மாணவர்கள் சார்பாக கணிதத்துறை மாணவி ஸ்ரீதேவி ஆகியோர் நன்றி கூறினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் சோலிஸ் அண்ணாமலை,  கல்லூரி ஆட்சிக் குழு தலைவர்  அண.லெட்சுமணன் செட்டியார், கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்திராணி ஆகியோர் பேசினர். கல்லூரி

ஆட்சி குழு துணைத் தலைவர் சேவுகன் நன்றி கூறினார். முனைவர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார்.

Related Stories: