×

ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை

சாயல்குடி, டிச.28: ராமநாதபுரம், கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதி ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜைகள்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதம் முதல் மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் கோயில்களில் தினந்தோறும் வழக்கமான வழிபாடும், சனி, புதன் கிழமைகளில் கன்னி பூஜை, படி பூஜையும் நடத்தி வந்தனர். நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று  சபரிமலை ஐயப்பன் மண்டலபூஜையை முன்னிட்டு கடலாடி பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை குருநாதர் கருப்பையா, சற்குரு நாதர் மகேந்திரபாண்டியன் முன்னிலையில் மங்கள இசை, கணபதிஹோமத்துடன் துவங்கியது.


தொடர்ந்து ஐயப்பனுக்கு பழங்கள், பொங்கல் படைத்து கூட்டு சரணத்துடன் மண்டலபூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலையில் மழை பெய்ய வேண்டி 108 விளக்கு பூஜை, கூட்டு பிரார்த்தனை, பஜனை, ஹரிவராசனம் நடந்தது. தர்ம சாஸ்தா கோயிலில் குருநாதர் நாகராஜன் தலைமையிலும், சற்குரு சுப்ரமணியன் முன்னிலையிலும் காலையில் கணபதிஹோமம், சிறப்பு அர்ச்சனை நடந்தது. பொதுமக்கள் பொங்கலிட்டும்,  பழங்களை படைத்தும் சிறப்பு  வழிபாடு நடத்தினர். இரவில் மழை பெய்ய வேண்டி சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இது போன்று சாயல்குடி  ஐயப்பன் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. முதுகுளத்தூர் மின்சார வாரியம் ஐயப்பன்கோயிலில் குருநாதர் திருமால் தலைமையில் மண்டல பூஜை, அன்னதானம் நடந்தது.

Tags : Mandala Puja ,Iyappan Temple ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...