அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் விரைவில் நூறுநாள் வேலை திட்டம் வெங்கடேசன் எம்எல்ஏ தகவல்

அலங்காநல்லூர்,டிச.28:  அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதனடிப்படையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற வெங்கடேசன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில்  அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு 100 நாள் வேலை திட்ட ஒதுக்கீடு செய்ய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து பேசினார். இதன் பேரில் சிறப்பு திட்டத்தில் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முதலமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று வெங்கடேசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மேலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்தில் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதிகளில் இரண்டு கோடி மதிப்பிலான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட உள்ளது. அலங்காநல்லூர் பேரூராட்சி தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றப்படும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன்.தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ்

மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாதேவி கோவிந்தராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் ஜெயராமன், மாரி, கோவிந்தராஜ், சந்திரன், வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: