திண்டுக்கல் சிறை முன்பு தர்ணா

திண்டுக்கல், டிச. 28: சின்னாளபட்டி அருகே கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர் நேற்று திண்டுக்கல் சிறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சிறை ஜெயிலர், பணியில் உள்ள காவலர்கள் எனது கணவர் ரவிக்குமார் உள்பட கைதிகளை அடித்து துன்புறுத்துகின்றனர். உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களை கைதிகளிடம் கொடுக்கவும், கைதிகளை பார்க்க அனுமதிக்கவும் பணம் கேட்கின்றனர்.

சம்பந்தப்பட்ட ஜெயிலர், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு போலீசார், கவிதாவை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: