பழநி நகராட்சி ஊழியர் மர்மச்சாவு

பழநி, டிச. 28: பழநி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ்வரன் (54). பழநியில் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களாக வெங்கடேஷ்வரன் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. நேற்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பழநி டவுன் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேஷ்வரன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழநி ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: