×

ஊட்டி பூங்கா நடைபாதையில் ராட்சத மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் வெட்டி அகற்ற கோரிக்கை

ஊட்டி, டிச.28:  ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர நடைபாதைகளில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். இவர்களில், சுற்றுலா பயணிகள் சாலையோர நடைபாதையையே  பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி, உள்ளூர் மக்கள் பலர் காலை மற்றும்  மாலை நேரங்களில் நடைபயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  காதுகேளாதோர் பள்ளி வளாகத்தை ஒட்டி சில ராட்சத கற்பூரம் மற்றும் சாம்பிராணி  மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது   என்பதால், தற்போது சாய்ந்து வருகிறது. பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, சுற்றுலா பயணிகள்  மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty Park ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது