கிறிஸ்துமஸ் மர விழா

திருவில்லிபுத்தூர், டிச. 27: திருவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது. குருசேகர தலைவர் மற்றும் சபை குரு அருள்திரு பால்தினகரன் தலைமையில் இந்த விழா நடந்தது. அனாயா கிஷோன் சிறப்பு பாடல் பாடினார். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு, கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் குழந்தைகளின் நடனம் நடைபெற்றது. திருநெல்வேலி, இந்திய மிஷினரி சங்கத்தின் அருள்திரு வில்சன் தேவ செய்தியளித்தார். உதவி குருக்கள் சாலமோன், கிளாட்வின் சாம், ரூபன் மற்றும் திருச்சபை மக்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: