×

உத்தமபாளையத்தில் தன்னார்வலர்களுக்கு

உத்தமபாளையம், டிச. 27:  உத்தமபாளையம் வட்டார வளமையத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு தேர்வான தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தொடங்கியது. பயிற்சிக்கு வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் ச.அருணா தலைமை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். பயிற்சியின் நோக்கம் குறித்து அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் பேசினார்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் செல்லக்கண்ணு, அழகுராஜா, ஆசிரியர்கள் செந்தில், சகாயநாதன், பெலிக்ஸ் லியோராணி, மனோஜ் பிரபு, பெர்ணா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினர். இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்த விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பதிவு செய்தவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு சரிபார்ப்பு, சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் மற்றும் குழு கலந்தாய்வு மூலம் தீர்வு செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags : Uthamapalaiyam ,
× RELATED உத்தமபாளையத்தில் பழுதான லாரியால் 10 மணிநேரம் டிராபிக்