காரைக்குடியில் ஆசிரியர் கூட்டணி வட்டார கூட்டம்

காரைக்குடி, டிச. 27: காரைக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாக்கோட்டை வட்டார கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் காளியம்மாள் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் அன்பரசு பிரபாகர் தீர்மானங்கள் வாசித்தார். பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீண்டும் இணைப்பொதுச்செயலளராக தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் மற்றும் மாநில செயற்குழுவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வட்டார பொருளாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தின் கூட்டம் நடந்தது. நலச்சங்க தலைவர் ஆனி கிறிஸ்டி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். லாபபங்கீட்டு தொகை வழங்கப்பட்டது.

Related Stories: