×

தேவகோட்டையில் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்க ஆலோசனை

தேவகோட்டை, டிச. 27: தேவகோட்டை நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு காலமுறை முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் நலபாதுகாப்புக்குழு தலைவர் பிரதிநிதியான நகராட்சி மேலாளர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. 6வது வார்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜதுரை, தேவகோட்டை நகர் எஸ்ஐ கலைச்செல்வன், விவேகா தொண்டுநிறுவனம் ஜெயராணி, உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேல்நிலைப் மற்றும் உயர்நிலை பள்ளி குழந்தைகளுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டம் குறித்து மற்றும் இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள் மனரீதியாக பாதிப்பு அடைய செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளல், மகளிர் குழுவில் இருந்து தன்னார்வலர்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தல், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், நகராட்சி எல்லைக்குள் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவை மீது காலாவதியான தேதி மற்றும் பொருட்கள் தரம் தொடர்பாக அவ்வப்பொழுது உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் ஆய்வு செய்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் கண்காணிப்பு செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Devakottai ,
× RELATED காங். வேட்பாளர் அறிமுக கூட்டம்