சிங்கம்புணரி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு

சிங்கம்புணரி, டிச.27: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரியூர், மல்லாக்கோட்டை ஊராட்சிகளில் சுகாதாரத்துறை மூலம் 16வது கொரானா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் மதுசூதனன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம் நடைபெற்று வரும் பகுதிகளில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் போடாதவர்கள் விவரங்கள் சேகரிப்பது குறித்த நடவடிக்கையை ஆய்வு நடத்தினார். பணி நிமித்தமாக வெளியூருக்கு சென்று வேலை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் கேட்டறியப்பட வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். இதில் சுகாதாரத்துறை இணை துணை இயக்குனர் ராம் கணேஷ், தாசில்தார் செல்வி, வட்டார மருத்துவர் நபிஷா பானு, மல்லாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜய ராதாகிருஷ்ணன், ஏரியூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், ஊராட்சி செயலர்கள் ருக்குமணி, பெரியகருப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: