×

திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல், டிச. 27: திண்டுக்கல்லில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்புற நூலகர் நல அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று முதல் பணி செய்தனர். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகத்துறையில் 1915 ஊர்புற நூலகங்களில் சுமார் 1520 ஊர்ப்புற நூலகர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் பிளஸ் 2, சிஎல்ஐஎஸ் கல்வித் தகுதியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நேர்காணல் அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக மிகவும் குறைந்த ஊதியத்தில், அரசின் எவ்வித பயன்களுமின்றி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஊர்ப்புற நூலகர்கள் மாநிலம் தழுவிய கோரிக்கை அட்டை அணிந்து நேற்று முதல் 30ம் தேதி வரை பணி புரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில், `` 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொதுநூலக பணி விதிகள் திருத்தம் செய்து அனைவரையும் மூன்றாம் நிலை நூலகர்களாக்க வேண்டும். 10 வருடங்களாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும். நூலகத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் நூலகத் துறைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Ayyappa ,Dindigul ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்