திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம்

திருப்பூர்,டிச.27: திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

இதில் தை பொங்கல் தினத்தன்று சமத்துவ பொங்கல் வைத்து, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

மார்ச் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று திருப்பூர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிகொடியேற்றி, இனிப்பு வழங்கி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது. தி.மு.க.வின் பொதுச்செயலாளராக 50 ஆண்டுகாலம் செயலாற்றி கொள்கை வீரரான பேராசிரியரின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. நூலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது.

வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள்,  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: