×

நீட் ேதர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சியினரை அழைத்து சென்று குடியரசு தலைவரிடம் முறையிட உள்ளோம்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

சென்னை, டிச.27: நீட் ேதர்வை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று குடியரசு தலைவரிடம் முறையிட உள்ளோம் என்று டி.ஆர்.பாலு எம்பி கூறினார். தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்  நேற்று காலை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்   தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பெரும்புதூர் தொகுதி எம்பி டி.ஆர்.பாலு பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை  மனுக்களை பெற்றார். பின்னர் டி.ஆர்.பாலு எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை நாங்கள் ஆளுநரிடம் வழங்கி, 3 மாதம் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து பேசியும் பலனில்லை. இது தொடர்பாக, நானும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளேன். 19 பேரை அநியாயமாக பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், ஆளுநர் இது தொடர்பாக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, எந்த வகையில் நியாயம்.

நாங்கள் அதிமுக, பாஜ தவிர அனைத்து கட்சி எம்பி, எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்து சென்று, குடியரசு தலைவரை நேரில் சந்தித்து முறையிட இருக்கிறோம். நீட் தேர்வு தொடர்பாக, சட்டமன்றத்தில் ஆதரவளித்த அதிமுக, பா.ஜ. என்ன காரணத்தினாலோ, தற்போது அனைத்து கட்சி கோரிக்கை மனுவில் கையெழுத்திடவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுத்தும், எங்களோடு அக்கட்சியினர்  டெல்லிக்கு வரவும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Tags : President ,NEET ,DR ,Balu MP ,
× RELATED காவிகளுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை: தி.க. தலைவர் வீரமணி பேச்சு