கருங்குழி பேரூராட்சியில் மாடித்தோட்ட அமைப்பு பயிற்சி

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி திட்டம் மூலமாக கருங்குழி பேரூராட்சியில் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை அலுவலர்கள் பாலகுமாரன், கோட்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, பேரூராட்சி அலுவலகம் மீது அமைக்கப்பட்டுள்ள மாடி தோட்டத்தை அப்பகுதி பெண்கள் பார்வையிட்டனர். இதில், கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொட்டிகள், விதைகள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டன.

Related Stories: