திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் பேரூர் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கலந்துகொண்டார். சமீபத்தில் மறைந்த திமுக நிர்வாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நடைபெற இருக்கும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி, பொறுப்பு குழு உறுப்பினர் பரிமளம் விஸ்வநாதன், ஆரணி அன்புவாணன், கோளூர் கதிரவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: