×

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் 97ம் ஆண்டு துவக்க விழா

தஞ்சை,டிச.27: தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தலைமை வகித்தார். கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன் கட்சி கொடியேற்றி பேசினார். இதில் மக்களை சாதிய மதவாத சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் தாரைவார்க்கும் மத்திய அரசுக்கு எதிராக உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது. மாநகர செயலாளர் முத்துக்குமரன், நிர்வாகிகள் வீரமோகன், செல்வகுமார், பக்கிரிசாமி, கோவிந்தராஜன், சேவையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Inauguration Ceremony ,Communist ,Party of ,India ,Thanjavur ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்