×

கந்தர்வகோட்டை பகுதியில் 25 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கந்தர்வகோட்டை, டிச.27: கந்தர்வகோட்டை பகுதியில் 25 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள புதுநகர் சுகாதார நிலையம், வீரடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், கந்தர்வகோட்டை அரசினர் மருத்துவமனை ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர். இதில் 25 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அந்தந்த பகுதிளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வந்து முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுச் சென்றனர். இதில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், மருத்துவத் துறையினர் அனைத்து முகாம்களையும் கண்காணித்தனர். இதற்கான முன் ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.

Tags : Corona vaccination ,Kandarwakottai ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...