×

செம்பனார்கோயிலில் வாட்டர் ஆப்பிள் விற்பனை அமோகம்


செம்பனார்கோயில், டிச.27:செம்பனார்கோயில் பகுதியில் வாட்டர் ஆப்பிள் விற்பனை அமோகமாக உள்ளது. நம் முன்னோர்கள் உடல் சீதோசன நிலை மற்றும் காலநிலைக்கு ஏற்ப சத்துள்ள பழங்களை விளைவித்து சாப்பிட்டு வந்தனர். அதன்படி அந்தந்த சீசனில் விளைவிக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியம் ஏற்படும். அந்தவகையில் கேரளா, குற்றாலம் போன்ற பகுதியில் விளைவிக்கப்படும் சத்து நிறைந்த வாட்டர் ஆப்பிள், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து வாட்டர் ஆப்பிளை விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், கேரளா, குற்றாலம் ஆகிய பகுதிகளில் இந்த வாட்டர் ஆப்பிள் விளைவிக்கப்படுகிறது. நாங்கள் குற்றாலத்திலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். இந்த வாட்டர் ஆப்பிள் கார்த்திகை, மார்கழி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் மட்டும் தான் விற்பனைக்கு வரும். தற்போது மார்கழி மாதமாக இருப்பதால் விற்பனைக்கு வந்துள்ளது. பச்சை, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற நிறங்களில் வாட்டர் ஆப்பிள் உள்ளது. இந்த பழம் ஒரு கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. குளிர்ச்சி நிறைந்த இந்த பழம் இதயத்திற்கு வலு சேர்ப்பதுடன் உடலுக்கு சத்து நிறைந்ததாக உள்ளது. நெல்லிக்காய் போன்று சுவையாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர் என்றார்.

Tags : Sembanarkoil ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை