கரூர் மாநகராட்சி பகுதியில் பள்ளி கட்டிட உறுதித்தன்மை குறித்து கமிஷனர் ஆய்வு

கரூர், டிச.27: கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி கட்டிடங்களின் உறுதிதன்மை குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றின் கழிவறையின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 13 நகராட்சி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் அடங்கும்.

இதேபோல் மாநகராட்சி பகுதியில் சுய நிதியின் கீழ் 16 பள்ளிகளும் அரசு உதவி பெறும் 12 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறுள்ள நிலையில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இன்ஜினியர் நக்கீரன், நகரமைப்பு அலுவலர் சிவகுமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் லட்சியவர்ணா ஆகியோர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பள்ளி எந்த ஆண்டு கட்டப்பட்டது எந்த விவரத்தையும், பள்ளியின் தரத்தில் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கலவையின் தன்மையின் அளவு முறையாக அனுமதி சீட்டில் பெறப்பட்டுள்ளதா, பள்ளியின் உறுதிச் சான்று புதுப்பிக்கப்பட்டுள்ள விவரம் ஆகியவை சேகரிக்கப்பட்டது. மேலும் கழிவறையில் முறையான தண்ணீர் வருகிறதா, முறையாக இவரை சுத்தம் செய்யப்படுகிறதா என்பது பற்றி பள்ளி மாணவ, மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் பள்ளியின் கட்டிடத்தை வருடத்திற்கு ஒரு முறை சுண்ணாம்பு வெள்ளை அடிக்க வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: