×

போத்தீஸ் நிறுவனத்தின் லியா வைர நகைகள் அறிமுகம் \

நெல்லை, டிச.27: நெல்லை போத்தீஸ் நிறுவனம் பசுமையுடன் தொடர்பு கொண்ட ஒரு நிறுவனமாகும். தமது வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இலை என்பது இயற்கையை குறிக்கும் சொல். இயற்கையை விட அழகானது வேறு எதுவுமில்லை. இதனடிப்படையில் இலையின் பல வடிவங்களை கொண்ட லியா என்கிற வைர நகை வடிவமைப்பை போத்தீஸ் உருவாக்கி உள்ளது. லியா வடிவமைப்பு இலையின் முக்கியத்துவத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இளைய தலைமுறையை கருத்தில் கொண்டு அவர்கள் மனதளவில் இளமையாக இருப்பது போல தேர்வு செய்யும் நகைகளையும் அவர்களுக்கு விருப்பமான வடிவங்களில் போத்தீஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் விலை ரூ.80ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை. ஆனாலும் அனைவரும் வாங்கி அணியும் வகையில் விலை குறைவாக நவீன வகைகளில் நகைகளை வடிவமைத்ததுடன் மேலும் காரட் ஒன்றுக்கு வைரத்தின் தற்போதைய சந்தை விலையில் இருந்து ரூபாய் 10ஆயிரம் சிறப்பு தள்ளுபடியாக ஒரு மாத காலத்திற்கு போத்தீஸ் நிறுவனம் வழங்க உள்ளது. லியா வைர நகைகளின் அறிமுக விழாவில் முன்னாள் துணைமேயர் முத்துராமலிங்கம், டாக்டர் மணிமாலா, டாக்டர் சுபாஷினி கோவில்பட்டி, திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் பேராசிரியர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு மின் வாரிய ஆடிட்டர் சரளாலட்சுமி, திருநெல்வேலி ஆண்டி நாடார் ஸ்டோர்ஸ் முத்துமாரியம்மாள், ஓய்வு பெற்ற தாசில்தார் சங்கரன் ஆகியோர் பங்கேற்று முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை போத்தீஸ் ஸ்வர்ண மஹால் பொதுமேலாளர் காந்திமதிநாதன், மேலாளர் நயினார், விளம்பரதுறை மேலாளர் கனி ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Tags : Bodhisattva ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி...