திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தின சிறப்பு மலர் வெளியீடு

திருச்சி, டிச.25: திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் சித்த மருத்துவ தின சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மலரை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், வாழ்வு முன்னேற்றம், உள்ளத்தின் ஊக்கத்துக்கு உடல்நலம் முக்கியம். அதை பேணிக்காப்பது நமது கடமையாகும். உடல் நடமாடும் கோயில், அதை நல்லப்படியாக வைத்து கொண்டால் உள்ளம் என்ற ஜீவன் நல்லப்படியாக இருக்கும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். சித்த மருத்துவத்தில் பக்க விளைவு கிடையாது. இதனால் சித்த மருத்துவத்தை நாடி செல்ல மக்கள் ஆரம்பித்துள்ளனர். சித்த மருத்துவம் தாய்ப்பால் போன்றது. அதில் கலப்படம் இல்லாமல் அரசு வழங்கி வருகிறது என்றார். விழாவில் கலெக்டர் சிவராசு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: