கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

விருதுநகர், டிச. 25: விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா பள்ளி தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமையில், பள்ளி செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ முன்னிலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் 10 மாவட்டங்களில் இருந்து 400க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதில் நோபிள் பள்ளி மாணவர்கள் கவின், தினகரன், சித்தார்த், நரேன் கார்த்திக், அபினேஷ், சுமேஷ் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகளை வழங்கப்பட்டது.

அதன்பின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும், கிறிஸ்துமஸ் தாத்தா மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

Related Stories: