காளையார்கோவில் பஞ்சாலையில் தொழிலாளர் உள்ளிருப்பு போராட்டம்

காளையார்கோவில், டிச.24: கொரோனா ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு சொந்தமான காளையார்கோவில் காளீஸ்வரர் பஞ்சாலை  மற்றும் தமிழகத்தில் உள்ள ஆறு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன. பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதிச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் 2000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவினை கூட நிர்வகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும். உடனே ஆலையை திறக்க கோரியும் முழு சம்பளம் வழங்க கோரியும் அனைத்து சங்கங்களின் சார்பாக நேற்று காளையார்கோவில் பஞ்சாலையில் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தப்பட்டது.

Related Stories: