பள்ளி மேலாண்குழு கூட்டம்

ராமநாதபுரம், டிச.25: மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் மேலாண் குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஜன்னத்துல் முர்ஷிதா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பைரோஸ் ஆசியம்மாள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறைகள், சிறுபான்மையின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆசிரியை ஆரோக்கிய வாலன்டினா மேரி நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Related Stories: