×

களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு திருப்பலி

மதுரை, டிச. 25: இயேசு பிரான் பூமியில் பிறந்த டிசம்பர் 25ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் இயேசு பிறந்ததின் அடையாளமாக, வீடுகளில் குடில் அமைத்து, அதில் இயேசு பாலகன் பிறப்பு உள்ளிட்ட சிலைகளை வைத்து ஆனந்தப்படுகின்றனர். இயேசு பிறந்த இடத்தை நட்சத்திரம் ஒன்று வழிகாட்டும். இதை நினைவு கூறும் வகையில் வீடுகளில் விளக்குகளால் ஸ்டார்களை பொருத்தி மின்விளக்கால் அழகுபார்ப்பர். அதன்படி இன்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நேற்றிரவு துவங்கி அதிகாலை வரை விடிய விடிய தேவாலயங்களில் சிறப்பு ஜெபம், திருப்பலி நிகழ்வுகள் நடந்தன.

மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு திருப்பலி பூஜையில் மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார். பூஜைக்கு பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் கூறி ஆசிர்வாதம் செய்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் மார்கழி பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது, புத்தாடை அணிந்து பங்கேற்றனர். இதேபோல், மதுரை நரிமேட்டில உள்ள கதீட்ரல் தேவாலயம், ஜான்சிராணி பூங்கா அருகே உள்ள பரிசுத்த ஜார்ஜ்ஆலயம், மாடக்குளத்தில் உள்ள ஜீவவார்ததை திருச்சபை, கீழவாசலில் தூயமரியன்னை ஆலயம், புதூரில் லூர்துஅன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா தொற்றால் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Tags : Christmas ,Madurai Churches ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...