அலங்காநல்லூர், டிச. 25: அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 11வது நாளாக நடந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாய கூலித்தொழிலாளிகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலையை முற்றுகையிட்டனர். கரும்பு அரவைக்கு உடனே ஆலையை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.