×

ஒட்டன்சத்திரத்தில் திமுக செயற்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரம், டிச. 25: ஒட்டன்சத்திரத்தில் நகர திமுக சார்பில் செயற்குழு கூட்டம் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்டத்துணைச் செயலாளர் ராஜாமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், ஆதிதிராவிடர்நலக்குழு அமைப்பாளர் திருமலைசாமி, நகர துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அப்பாச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Executive Committee ,Ottanchattaram ,
× RELATED முதல்வர் பிறந்தநாளை கொண்டாட காங்கயம்...