பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், டிச. 25: திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில், மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார், பொறுப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாநகர் மாவட்ட மதிமுக சார்பில், ஊத்துக்குளி ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில், மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில் பெரியார் உருவ படத்திற்கு மாலை, அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ், அவைத்தலைவர் நேமிநாதன் கலந்து கொண்டனர்.

Related Stories: