பெரியார் நினைவுதினம் அனுசரிப்பு

ஊட்டி, டிச.25: ஊட்டி நகர திமுக சார்பில் நேற்று பெரியார் நினைவு தினம்  அதன் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்  ஜார்ஜ் தலைமையில் அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி  செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெரியாரின் சிந்தனைகள் குறித்து  பலரும் பேசினர். இதில், நகர நிர்வாகிகள் கார்டன் கிருஷ்ணன்,  ஜெயகோபி, மஞ்சுகுமார், புஷ்பராஜ், மார்க்கெட் ரவி, தியாகு, வரதராஜ்,  லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: